ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் தமிழக வீரர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்தது. அந்த ஏலத்தில் 13 தமிழக வீரர்கள் தேர்வானார். தமிழ்நாடு, கர்நாடகா, தில்லி ஆகிய அணிகளில் இருந்து அதிகபட்சமாகத் தலா 13 வீரர்கள் ஏலத்தில் தேர்வானார்கள். அந்த ஏலத்தில் அதிகத் தொகை செலவிடப்பட்டது தமிழக வீரர்களுக்குத்தான். ரூ. 39.55 கோடி.
ஐபிஎல் 2022 போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். அவர்களில் ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, தினேஷ் கார்த்திக், ஆர். அஸ்வின், நடராஜன், சாய் கிஷோர், விஜய் சங்கர், சாய் சுதர்சன் என 9 பேர் ஐபிஎல் 2023 ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்டார்கள்.
ஐபிஎல் 2023 ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்ட தமிழக வீரர்கள்
1. ஷாருக் கான் (பஞ்சாப்) – ரூ. 9 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்) – ரூ. 8.75 கோடி
3. வருண் சக்ரவர்த்தி (கேகேஆர்) – ரூ. 8 கோடி
4. தினேஷ் கார்த்திக் (ஆர்சிபி) – ரூ. 5.50 கோடி
5. ஆர். அஸ்வின் (ராஜஸ்தான்) – ரூ. 5 கோடி
6. நடராஜன் (சன்ரைசர்ஸ்) – ரூ. 4 கோடி
7. சாய் கிஷோர் (குஜராத்) – ரூ. 3 கோடி
8. விஜய் சங்கர் (குஜராத்) – ரூ. 1.40 கோடி
9. சாய் சுதர்சன் (குஜராத்) – ரூ. 20 லட்சம்
அதேபோல ஐபிஎல் 2023 ஏலத்துக்கு முன்பு 5 தமிழக வீரர்களை அணிகள் விடுவித்தன.
ஐபிஎல் 2023 ஏலத்துக்கு முன்பு அணிகளால் விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்
1. எம். அஸ்வின் (மும்பை)
2. சஞ்சய் யாதவ் (மும்பை)
3. என். ஜெகதீசன் (சிஎஸ்கே)
4. ஹரி நிஷாந்த் (சிஎஸ்கே)
5. பாபா இந்திரஜித் (கேகேஆர்)
ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் 16 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். இந்தமுறையும் நிறைய தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஐபிஎல் 2023 ஏலத்தில் பங்கேற்ற தமிழக வீரர்கள்
1. என். ஜெகதீசன்
2. எம். அஸ்வின்
3. பாபா இந்திரஜித்
4. அஜித் ராம்
5. சந்தீப் வாரியர்
6. ஹரி நிஷாந்த்
7. எம். சித்தார்த்
8. சஞ்சய் யாதவ்
9. அஜிதேஷ்
10. சுரேஷ் குமார்
11. ராக்கி பாஸ்கர்
12. அனிருத் சீதாராம்
13. பி. சூர்யா
14. சோனு யாதவ்
15. பாபா அபரஜித்
16. திரிலோக் நாக்
ஐபிஎல் 2023 ஏலத்தில் ஜெகதீசன், எம். அஸ்வின், சோனு யாதன் என மூன்று தமிழக வீரர்கள் தேர்வானார்கள்.
ஐபிஎல் 2023 ஏலத்தில் தேர்வான தமிழக வீரர்கள்
1. ஜெகதீசன் (கேகேஆர்) – ரூ. 90 லட்சம்
2. எம். அஸ்வின் (ராஜஸ்தான்) – ரூ. 20 லட்சம்
3. சோனு யாதவ் (ஆர்சிபி) – ரூ. 20 லட்சம்
ஐபிஎல் 2023 ஏலத்தில் பல தமிழக வீரர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகாத தமிழக வீரர்கள்
பாபா இந்திரஜித்
பாபா அபரஜித்
அஜித் ராம்
சந்தீப் வாரியர்
ஹரி நிஷாந்த்
எம். சித்தார்த்
சஞ்சய் யாதவ்
அஜிதேஷ்
சுரேஷ் குமார்
ராக்கி பாஸ்கர்
திரிலோக் நாக்
அனிருத் சீதாராம்
பி. சூர்யா
ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்ட வீரர்கள், ஏலத்தில் தேர்வான வீரர்கள் என்று ஐபிஎல் 2023 போட்டியில் மொத்தமாக 12 தமிழக வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 2 பேர் குறைவு தான்.
ஐபிஎல் 2023 போட்டியில் விளையாடும் தமிழக வீரர்கள்
1. ஷாருக் கான் (பஞ்சாப்) – ரூ. 9 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்) – ரூ. 8.75 கோடி
3. வருண் சக்ரவர்த்தி (கேகேஆர்) – ரூ. 8 கோடி
4. தினேஷ் கார்த்திக் (ஆர்சிபி) – ரூ. 5.50 கோடி
5. ஆர். அஸ்வின் (ராஜஸ்தான்) – ரூ. 5 கோடி
6. நடராஜன் (சன்ரைசர்ஸ்) – ரூ. 4 கோடி
7. சாய் கிஷோர் (குஜராத்) – ரூ. 3 கோடி
8. விஜய் சங்கர் (குஜராத்) – ரூ. 1.40 கோடி
9. ஜெகதீசன் (கேகேஆர்) – ரூ. 90 லட்சம்
10. சாய் சுதர்சன் (குஜராத்) – ரூ. 20 லட்சம்
11. எம். அஸ்வின் (ராஜஸ்தான்) – ரூ. 20 லட்சம்
12. சோனு யாதவ் (ஆர்சிபி) – ரூ. 20 லட்சம்
ஐபிஎல் 2023: தமிழக வீரர்களின் பங்களிப்பும் அவர்களுடைய சம்பளமும்!
https://img1.hscicdn.com/image/upload/f_auto/lsci/db/PICTURES/CMS/286700/286793.6.jpg
#ஐபஎல #தமழக #வரரகளன #பஙகளபபம #அவரகளடய #சமபளமம