No results found

    இது ஒரு சாதனை: 7-வது ஐபிஎல் அணியில் விளையாடவுள்ள இரு இந்திய வீரர்கள்! | live match score | live score

    ஐபிஎல் போட்டியின் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே அணியில் விளையாடும் வீரர் என்கிற பெருமை விராட் கோலிக்கு உண்டு. இதன் இன்னொரு பக்கம் ஐபிஎல் 2023 போட்டியில் இரு இந்திய வீரர்கள் தங்களுடைய 7-வது அணியில் விளையாடவுள்ளார்கள். இந்தப் பெருமை வேறு எந்த இந்திய வீரர்களுக்கும் கிடையாது.

    ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலத்தில் மனிஷ் பாண்டேவை ரூ. 2.40 கோடிக்கு தில்லி அணியும் உனாட்கட்டை ரூ. 50 லட்சத்துக்கு லக்னெள அணியும் தேர்வு செய்தன. ஐபிஎல் போட்டியில் இருவருக்கும் இது 7-வது அணி. இதற்கு முன்பு வேறு எந்த இந்திய வீரரும் 6 ஐபிஎல் அணிகளுக்கு மேல் விளையாடியதில்லை.

    மனிஷ் பாண்டே, உனாட்கட்டை மிஞ்சிய ஒருவர் உள்ளார். ஆரோன் ஃபிஞ்ச். ஐபிஎல் போட்டியில் அதிக அணிகளில் விளையாடியவர் அவர்தான். 9 அணிகள்!

    மனிஷ் பாண்டே இதற்கு முன்பு விளையாடிய 6 அணிகள் – ஆர்சிபி, புனே, கேகேஆர், மும்பை, சன்ரைசர்ஸ், லக்னெள.

    உனாட்கட் இதற்கு முன்பு விளையாடிய 6 அணிகள்: தில்லி, கேகேஆர், மும்பை, புனே, ராஜஸ்தான், ஆர்சிபி.

    இது ஒரு சாதனை: 7-வது ஐபிஎல் அணியில் விளையாடவுள்ள இரு இந்திய வீரர்கள்!

    https://img1.hscicdn.com/image/upload/f_auto/lsci/db/PICTURES/CMS/338000/338043.9.jpg

    #இத #ஒர #சதன #7வத #ஐபஎல #அணயல #வளயடவளள #இர #இநதய #வரரகள

    Post a Comment

    Previous Next

    نموذج الاتصال